கரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மைப் பணியாளர்கள் பலரும் அயராது உழைத்து வருகின்றனர். ஆனால், தற்போது களப்பணியாளர்களுக்கும் கரோனா தொற்று வருவது பலருக்கும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. மக்களுக்காக உழைப்பவர்களை காப்பாற்றுவதற்காக பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில், கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் உள்ள ஃபோர்டிஸ் மருத்துவமனையில் மித்ரா என பெயரிடப்பட்டுள்ள இரண்டு ரோபோக்கள் பணியமர்த்தப்பட்டு களமிறக்கியுள்ளன.
ரோபோக்கள் செயல்பாடுகள் குறித்து மருத்துவமனை தரப்பில் கூறுகையில், "இந்த ரோபோக்கள் ஸ்கிரினிங்கை இரண்டு கட்டங்களாக செய்கின்றன. முதல் ரோபோ மருத்துவமனைக்குள் வரும் மருத்துவர்கள், செவிலியர்கள், பிற மருத்துவ நிபுணர்கள் அனைவரும் ஸ்கேன் செய்வது மட்டுமின்றி இருமல், சளி உள்ளதா என்பதையும் பரிசோதிக்கும். பின்னர். நபரின் உடல்நிலை சீராக உள்ளதை உறுதிசெய்த பின் அவரின் புகைப்படம், பெயர், பரிசோதனை முடிவுகள் அடங்கிய அனுமதி சீட்டை வழங்கி மருத்துவமனைக்குள் அனுமதியளிக்கும்.