தெலங்கானா மாநிலம், ஹைதராபாத் கரீம்நகரிலிருந்து சமீர்பேட் நோக்கி வந்து கொண்டிருந்த கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து நெடுஞ்சாலையிலுள்ள தடுப்புச் சுவரின் (Divider) மோதி எதிர்புறம் வந்த மற்றொரு கார் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்தக் கோர விபத்தில், காரில் பயணம் செய்த பிற்படுத்தப்பட்டோர் பிரிவு தலைவர் கிஷோர் சாரி, அவரது மனைவி, மகன் என 3 பேர் பலியாகினர். படுகாயமடைந்த மற்றொரு மகன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலையும் கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த விபத்தில், எதிரே வந்த காரில் பயணித்த இருவர் காயமடைந்தனர்.
ஹைதராபாத் சாலை விபத்து - பல்டியடித்த கார்... பதற வைக்கும் சிசிடிவி காட்சி... - accident
ஹைதராபாத்: சாலையோரம் இருந்த தடுப்புச் சுவரில் கார் மோதிய விபத்தில் அம்மாநில பிற்படுத்தப்பட்டோர் பிரிவு தலைவர் கிஷோர் சாரி உள்ளிட்ட மூவர் உயிரிழந்தனர்.
கார்
இந்த விபத்தை பார்த்த பொதுமக்கள் உடனே காவல்துறையினருக்கு தகவல் அளித்ததை அடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் உடல்களை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
Last Updated : Aug 13, 2019, 5:20 PM IST