பிகார் சட்டப்பேரவைத் தேர்தலில் ஆர்ஜேடி - காங்கிரஸ் கூட்டணி இணைந்து தேர்தலை எதிர்கொண்டது. அதில் காங்கிரஸ் கட்சி சார்பாக போட்டியிட்ட 70 தொகுதிகளில் 19 தொகுதிகளில் மட்டுமே வெற்றிபெற்றது. இதனால் ஆர்ஜேடி கூட்டணியின் தோல்விக்கு காங்கிரஸ் கட்சி காரணம் என்ற விமர்சனம் வைக்கப்பட்டுவருகிறது.
இதனிடையே தொலைக்காட்சி விவாதத்தின்போது ஆர்ஜேடியின் மூத்தத் தலைவர் சிவானந்த் திவாரி, மகா கூட்டணியின் தோல்விக்கு காங்கிரஸ்தான் காரணம் என வெளிப்படையாகவே பேசினார். அதுமட்டுமல்லாமல், ராகுல் காந்தியின் பிகார் சுற்றுப்பயணத்தின்போது ஒருநாளைக்கு இரண்டு பேரணிகளில்தான் பங்கேற்றார். பிரியங்கா காந்தி எங்கு சென்றார் என்றே தெரியவில்லை.
அதுமட்டுமல்லாமல், தேர்தல் பரப்புரை உச்சத்தில் இருந்தபோது, பிரியங்கா காந்தியுடன் ராகுல் சுற்றுலாவில் இருந்தார் என விமர்சனம் செய்தார்.