பிகார் சட்டப்பேரவைத் தேர்தல் இந்தாண்டு அக்டோபர் மாதம் நடைபெறவுள்ளது. இதனைத் தொடர்ந்து, ஆளும் கட்சியான ஐக்கிய ஜனதா தளத்தை விமர்சிக்கும் நோக்கில் ராஷ்டிரிய ஜனதா தளம் போஸ்டர்கள் வெளியிட்டுள்ளது. அதில், பழுதடைந்த ரயில் என்ஜின்கள் பிகாரை அழிப்பதாக எழுதப்பட்டுள்ளது.
வீதிக்கு வந்த போஸ்டர் சண்டை...!
பாட்னா: பிகார் சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி ஆளும் கட்சியான ஐக்கிய ஜனதா தளத்தை போஸ்டர்கள் மூலம் எதிர்க்கட்சியான ராஷ்டிரிய ஜனதா தளம் விமர்சித்துள்ளது.
நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் ஊழலில் ஈடுபட்டுவருவதாகவும் மக்களிடையே பொய் பரப்புரையில் ஈடுபட்டுவருவதாகவும் விமர்சிக்கப்பட்டுள்ளது. போஸ்டரில் ஒட்டப்பட்டிருக்கும் புகைப்படத்தில் இடது பக்கத்தில் மாநில முதலமைச்சர் நிதிஷ் குமாரின் புகைப்படமும் இடது பக்கத்தில் துணை முதலமைச்சர் சுசில் குமார் மோடியின் புகைப்படமும் ஒட்டப்பட்டுள்ளன. பிகாரில் கடந்த 15 ஆண்டுகளாக ஐக்கிய ஜனதா தளத்தின் ஆட்சி நடைபெற்றுவருவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: நேபாளத்துக்கு சுற்றுலா சென்று உயிரிழந்த கேரளாவைச் சேர்ந்தவர்களின் உடல்கள் தகனம்