கரோனா பரவல் காரணமாக நாடு முழுவதும் சில தளர்வுகளுடன் ஊரடங்கு அமலில் உள்ளது. இருப்பினும், நாட்டில் இதுவரை 33 ஆயிரத்து 425 பேர் உயிரிழந்திருக்கின்றனர். 14 லட்சத்து 80 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் இறப்பு விகிதம் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. இதனால் கரோனாவல் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களுக்கு இறுதிச்சடங்கு செய்வதில் சிரமம் ஏற்படுகிறது.
இறுதிச்சடங்கிற்கு எடுத்துச் செல்ல ஆம்புலன்ஸ் கிடைக்காமல், உயிரிழந்தவர்களின் உறவினர்கள் அல்லல்படுகின்றனர். அதுமட்டுமின்றி கரோனாவால் உயிரிழந்தவர்களை அடக்கம் செய்யும் வழிமுறைகளையும் அலுவலர்கள் குழப்பிவருவதாகப் பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
இறுதிச்சடங்கை செய்வதில் மாநிலங்கள் செய்துள்ள முன்னேற்பாடுகள் என்னென்ன?
டெல்லி:தலைநகரான டெல்லியில் 13 தகன மயானங்கள், நான்கு கல்லறை தோட்டங்கள் ஆகியவை கரோனா தொற்றால் உயிரிழந்தவர்களை அடக்கம்செய்ய தயார் நிலையில் உள்ளன. இவற்றில் ஆறு தகன மயானங்கள், நான்கு புதைக்குழிகள் கரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் உயிரிழந்த நபர்களைப் புதைக்க ஒதுக்கப்பட்டுள்ளன.
மகாராஷ்டிரா:கரோனா தொற்று உயிரிழப்பில் நாட்டில் முதல் இடத்தில் உள்ள மாநிலமான மகாராஷ்டிராவில், 49 மாநகராட்சி தகன மையங்களும் 20 தனியார் தகன மையங்களும் உள்ளன.