தமிழ்நாடு

tamil nadu

By

Published : Feb 24, 2020, 11:37 AM IST

ETV Bharat / bharat

பாஜக ஆளும் மாநிலங்களில் கலவரங்கள் நடைபெறுகிறது - உத்தவ் தாக்கரே குற்றச்சாட்டு

மும்பை: குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டங்களும் கலவரங்களும் பாஜக ஆளும் மாநிலங்களில் மட்டுமே நடைபெறுகிறது என மகாராஷ்டிரா முதலமைச்சர் உத்தவ் தாக்கரே குற்றஞ்சாட்டியுள்ளார்.

Uddhav
Uddhav

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்றுவருகின்றன. இந்நிலையில், மும்பையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் மகாராஷ்டிரா முதலமைச்சர் உத்தவ் தாக்கரே கலந்துகொண்டார். அப்போது, அவர் பாஜகவை கடுமையாக விமர்சித்து கருத்து தெரிவித்தார். அவர் கூறுகையில், "மகாராஷ்டிராவில் எங்கள் தலைமையிலான கூட்டணி ஆட்சி நடைபெறுவதால், குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் கலவரங்கள் வெடிக்கவில்லை.

பாஜக ஆளும் உத்தரப் பிரதேசத்திலும் உள்துறை அமைச்சகத்திற்கு கீழ் இயங்கும் டெல்லியிலும் ஷாஹின் பாக் போன்ற போராட்டங்கள் 60 நாள்களுக்கு மேலாக நடைபெற்றுவருகின்றன. ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்திற்குள் நுழைந்த பயங்கரவாதிகள் மாணவர்களைத் தாக்கினர். ஆனால், அந்த பயங்கரவாதிகள் இன்னமும் கைது செய்யப்படவில்லை" என்றார்.

குடியுரிமை திருத்தச் சட்டம் அமல்படுத்தப்பட்டாலும் தேசிய குடிமக்கள் பதிவேட்டை மாநிலத்தில் அமல்படுத்த மாட்டோம் என்பதை கூட்டணி கட்சி தலைவர்களுக்கு ஏற்கனவே தெரிவித்திருப்பதாக உத்தவ் தாக்கரே கூறியுள்ளார். இதனிடையே, மகாராஷ்டிராவில் நிதிநிலை அறிக்கை நாளை தாக்கல் செய்யப்படவுள்ளது.

இதையும் படிங்க: அமெரிக்க அதிபர் இன்று இந்தியா வருகை

ABOUT THE AUTHOR

...view details