நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் மரணம் தொடர்பான விசாரணையில் வெளிவந்த தகவலின் அடிப்படையில், ரியா சக்கரபோர்த்திக்கு போதை பொருள்களை இடம் மாற்றியத்தில் பங்கு வகித்ததாக என்.டி.பி.எஸ் சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
ரியா விரைவில் மருத்துவ பரிசோதனைக்கு அழைத்துச் செல்லப்படுவார், மேலும் மாலையில் ரிமாண்டிற்காக வீடியோ கான்பரன்சிங் மூலம் மாஜிஸ்திரேட் முன் ஆஜர்படுத்தப்படுவார்.
அவருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு, வீடியோ கான்பிரன்ஸ் மூலம் நீதிமன்றத்தின் முன் இன்று மாலை ஆஜர்ப்படுத்துப்படவுள்ளார்.
பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் கடந்த ஜூன் 14ஆம் தேதி மும்பை பாந்திராவில் உள்ள தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சுஷாந்தின் மரணம் குறித்து அவரது தந்தை அளித்த புகாரை தொடர்ந்து, சி.பி.ஐ., அமலாக்கத்துறை, போதைப்பொருள் தடுப்பு பிரிவு ஆகிய மூன்று முகமைகள் இந்த வழக்கை விசாரணை நடத்திவருகின்றன.
போதைப்பொருள் பயன்படுத்தியது, வாங்கியது, விற்றது தொடர்பாக சுஷாந்த் சிங்கின் முன்னாள் காதலியும், நடிகையுமான ரியா சக்கரபோர்த்தியின் தம்பி சோவிக், நடிகர் சுஷாந்த் சிங்கின் வீட்டு மேலாளர் சாமுவேல் மிரண்டா, வேலைக்காரர் திபேஷ் சாவந்த் உள்ளிட்ட எட்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
விசாரணையில் போதைப்பொருள் கும்பலுடன் நடிகை ரியாவுக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது. மூன்று நாளாக விசாரணை நடத்திய நிலையில் நடிகை ரியா சக்கரபோர்த்தி போதைப்பொருள் வழக்கு தொடர்பாக போதைப்பொருள் தடுப்பு பிரிவு காவல்துறையினரால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.