தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

பகுஜன் சமாஜ் கட்சியிலிருந்து சமாஜ்வாதிக்குத் தாவிய 5 எம்எல்ஏக்கள்! - அகிலேஷ் யாதவின் ஆதரவுடன் மாநிலங்களவைத் தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக நிற்கும் பிரகாஷ் பஜாஜ்

லக்னோ : பகுஜன் சமாஜ் கட்சியிலிருந்து விலகிய சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஐந்து பேர் சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தனர்.

பகுஜன் சமாஜில் இருந்தே சமாஜ்வாடிக்கு தாவிய 5 எம்.எல்.ஏக்கள்!
பகுஜன் சமாஜில் இருந்தே சமாஜ்வாடிக்கு தாவிய 5 எம்.எல்.ஏக்கள்!

By

Published : Oct 28, 2020, 6:51 PM IST

நடைபெறவிருக்கும் மாநிலங்களவைத் தேர்தலில் பி.எஸ்.பி. சார்பில் போட்டியிடும் வேட்பாளராக தலித் தலைவர் கௌதம் ராம்ஜி அறிவிக்கப்பட்டதை அடுத்து கட்சிக்குள் சிலருக்கு அதிருப்தி ஏற்பட்டதாக அறியமுடிகிறது.

குறிப்பாக, பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதியின் இந்த முடிவிற்கு அஸ்லம் சவுத்ரி, அஸ்லம் ரெய்னி, முஸ்தபா சித்திக், ஹக்கம் லால் பிந்த், கோவிந்த் ஜாதவ் ஆகிய ஐந்து சட்டப்பேரவை உறுப்பினர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.

அதிருப்தியில் பகுஜன் சமாஜ் கட்சியைச் சேர்ந்த ஐந்து சட்டப்பேரவை உறுப்பினர்கள் அக்கட்சியின் உத்தரவை மீறி, மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிடும் ராம்ஜி கௌதமுக்கு அளித்த ஆதரவை இன்று திரும்பப்பெற்றுள்ளனர்.

இது தொடர்பாக தேர்தல் அலுவலரிடம் மனு ஒன்றை அளித்த அவர்கள், அங்கிருந்து நேராக லக்னோவில் அமைந்துள்ள சமாஜ்வாதி கட்சி அலுவலகத்திற்குச் சென்றுள்ளனர்.

அங்கு சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவை நேரில் சந்தித்து, அக்கட்சியில் இணைந்தனர்.

சமாஜ் கட்சியில் இணைந்த இந்த 5 எம்எல்ஏக்களும் அகிலேஷ் யாதவின் ஆதரவுடன் மாநிலங்களவைத் தேர்தலில் சுயேச்சை வேட்பாளராக நிற்கும் பிரகாஷ் பஜாஜை ஆதரிக்கலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

ABOUT THE AUTHOR

...view details