தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jul 3, 2020, 4:35 PM IST

ETV Bharat / bharat

கோவாவில் மீண்டும் தொடங்கிய சுற்றுலா சேவை!

பனாஜி: கரோனா வைரஸ் பரவலால் மூன்று மாதங்களுக்கு மேல் தடை செய்யப்பட்டிருந்த சுற்றுலா சேவைகள், தற்போது மீண்டும் தொடங்கப்படுவதாக கோவா முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

goa
goa

நாட்டில் கரோனா வைரஸ் வேகமாக பரவியதை கருத்தில் கொண்டு கோவாவில் சுமார் மூன்று மாதங்களுக்கு மேலாக சுற்றுலா சேவைகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், கோவாவில் மீண்டும் சுற்றுலா சேவைகள் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் தொடங்கப்படுவதாக முதலமைச்சர் பிரமோத் சாவந்த் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர், "கோவாவின் பொருளாதாரமே சுற்றுலா சேவையை நம்பிதான் உள்ளது. அதைதான் மிகப்பெரிய வருவாயாக கருதுகிறோம். பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் திட்டமாக கோவாவில் மீண்டும் பாதுகாப்பு விதிமுறைகளுடன் சுற்றுலா சேவையை தொடங்க முடிவு செய்துள்ளோம். முதற்கட்டமாக 250 உணவக விடுதிகளை திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சுற்றுலாவாசிகள் முன்பதிவு செய்தால் மட்டுமே மாநிலத்திற்குள் அனுமதிக்கப்படுவார்கள். மேலும், கண்டிப்பாக கரோனா பரிசோதனை மேற்கொண்ட சான்றிதழ் அல்லது மாநிலத்திற்குள் நுழையும் முன்னர் எல்லையிலே சோதனை செய்துகொண்டதற்கான சான்றுகள் வேண்டும்" எனத் தெரிவித்தார்.

ஊரடங்கால் வீட்டிலே தவித்துவந்த மக்களுக்கு, இச்செய்தி புதிய புத்துணர்ச்சியை வழங்கும். இதுவரை கோவாவில் ஆயிரத்து 482 பேர் மட்டுமே கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details