தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

பட்டாசு ஆலையில் பயங்கர தீ விபத்து: 16 பேர் பரிதாபமாக உயிரிழப்பு! - பட்டாலா பட்டாசு ஆலையில் தீ விபத்து

பஞ்சாப்: பட்டாலா பட்டாசு ஆலையில் நடந்த தீ விபத்தில் 16 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் அங்கு மாறிக்கொண்டிருக்கும் சிலரை தேடும் பணி அங்கு தீவிரமடைந்துள்ளது.

பஞ்சாப் பட்டாசு ஆலை

By

Published : Sep 4, 2019, 9:39 PM IST

பஞ்சாப் மாநிலத்தில் குர்தாஸ்பூர் எனும் நகரத்தைச் சேர்ந்த பட்டாலா என்னுமிடத்தில் உள்ள பட்டாசு ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 18 பேர் உயிரிழந்தனர். மேலும் இந்த தீ விபத்தில் மாட்டிக்கொண்ட சிலரைத் தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இந்த தீ விபத்தில் அருகில் இருக்கும் சில கட்டடங்களும் சேதம் அடைந்தன.

இதனையடுத்து குர்தாஸ்பூர் எம்.பி.சன்னி தியோல், இத்தீவிபத்து மிகுந்த வருத்தத்தை அளிப்பதாகவும், தேசியப் பேரிடர் மேலாண்மை ஆணையமும், உள்ளூர் நிர்வாகமும் தீவிர மீட்புப் பணியில் ஈடுபட்டிருப்பதாகவும் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

ABOUT THE AUTHOR

...view details