புதுச்சேரி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, அமைச்சரவையில் முடிவு செய்யப்பட்டு மாநிலத்தின் புதிய தேர்தல் ஆணையராக ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரியான பாலகிருஷ்ணன் நியமிக்கப்பட்டார்.
இந்நிலையில் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி தூண்டுதலின் பேரில் தலைமைச் செயலர் அஸ்வின்குமார், உள்ளாட்சித் துறை செயலர் ,துறை இயக்குனர் மலர் கண்ணன் ,சார்பு செயலர் ஆகிய 4 பேர் புதிய தேர்தல் ஆணையரை நியமிக்க செய்தித்தாள்களில் விளம்பரம் செய்துள்ளனர்.
இது மாநில சட்டமன்றத்தில் அமைச்சரவையும் அவமதிக்கும் செயல் எனக் கூறி புதுச்சேரி அரியாங்குப்பம் தொகுதியின் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினரும், புதுவை மாநில திட்டக் குழு தலைவருமான ஜெயமூர்த்தி சட்டமன்ற வளாகத்தில் உள்ள சபாநாயகர் அலுவலகம் சென்று உரிமை மீறல் புகார் மனு அளித்தார்.