தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

போராடும்போது அகிம்சை வழியை பின்பற்ற வேண்டும் - குடியரசுத் தலைவர் அறிவுரை - குடியரசுத் தலைவர் உரை

டெல்லி: நல்ல காரணங்களுக்காக போராடும் இளைஞர்கள் அகிம்சை வழியைப் பின்பற்ற வேண்டும் என குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அறிவுரை வழங்கியுள்ளார்.

President
President

By

Published : Jan 26, 2020, 2:46 PM IST

குடியரசு தினத்தை முன்னிட்டு குடியரசுத் தலைவர் நாட்டு மக்களுக்கு உரை நிகழ்த்துவது வழக்கம். நாட்டின் 71ஆவது குடியரசு தினத்தை முன்னிட்டு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஆற்றிய உரையில், "சட்டப்பேரவை, நிர்வாகம், நீதித்துறை ஆகிய மூன்றின் அடிப்படையில் நவீன இந்தியா இயங்கிவருகிறது. மூன்றும் ஒன்றுக்கொன்று பின்னிப் பிணைந்தவை.

அடிப்படையில் மக்களால்தான் இந்த அமைப்பு இயங்குகிறது. குடியரசை இயக்குவதே மக்கள்தான். எதிர்காலத்தை தீர்மானிக்கும் அதிகாரம் மக்களிடம்தான் உள்ளது. கொள்கைகள் வேறாக இருந்தாலும் நாட்டின் வளர்ச்சிக்காகவும் மக்களின் நலனுக்காகவும் எதிர்க்கட்சிகளுடன் இணைந்து அரசு இயங்க வேண்டும்.

நல்ல காரணத்திற்காக போராடும் இளைஞர்கள் அகிம்சை வழியை பின்பற்ற வேண்டும். சமூக, பொருளாதார நோக்கங்களை அடைய அரசியலமைப்பின்படி செயல்பட வேண்டும்" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: தேசிய போர் நினைவிடத்தில் மோடி மரியாதை

ABOUT THE AUTHOR

...view details