தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ஆந்திராவில் 11 ஆயிரத்தை கடந்த கரோனா பாதிப்பு!

அமராவதி: ஆந்திராவில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 11 ஆயிரத்தை கடந்துள்ளது.

AP corona cases COVID-19 cases covid infections in AP AP government ஆந்திராவில் கரோனா பாதிப்பு கோவிட்-19
AP corona cases COVID-19 cases covid infections in AP AP government ஆந்திராவில் கரோனா பாதிப்பு கோவிட்-19

By

Published : Jun 27, 2020, 7:43 AM IST

ஆந்திராவில் கடந்த 24 மணி நேரத்தில், ஒரே நாளில் அதிகப்பட்சமாக 605 கோவிட்-19 பாதிப்பாளர்கள் வெள்ளிக்கிழமை (ஜூன்26) கண்டறியப்பட்டனர். இதையடுத்து மொத்த பாதிப்பாளர்களின் எண்ணிக்கை 11 ஆயிரத்து 305 ஆக அதிகரித்துள்ளது.

தற்போதுவரை மாநிலத்தில் ஏழு லட்சத்து 91 ஆயிரத்து 624 பேருக்கு கரோனா பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 22 ஆயிரத்து 305 பேர் கரோனா சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், அடுத்த மூன்று மாதங்களில் மாநிலம் முழுக்க சோதனை நடத்த வேண்டும் என்று அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. நேற்று மட்டும் சிகிச்சைக்கு பின்னர் 191 பேர் குணமடைந்து வீடு திரும்பினார்கள். இதையடுத்து சிகிக்சைக்கு பின்னர் குணமடைந்தோர் எண்ணிக்கை ஐந்து ஆயிரத்து 196 ஆக உயர்ந்துள்ளது. மேலும், ஆறு ஆயிரத்து 147 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

இது குறித்து சுகாதார அலுவலர்கள் தரப்பில், “தெலங்கானாவிலிருந்து திரும்பிய 20 பேருக்கும், தமிழ்நாட்டிலிருந்து திரும்பிய ஏழு பேருக்கும், கர்நாடகா, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களிலிருந்து திரும்பிய தலா இருவருக்கும் கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தனர்.

வெளிநாடுகளிலிருந்து ஆந்திரா திரும்பிய 372 பேருக்கு கரோனா பாதிப்புகள் அறியப்பட்டுள்ளது. இவர்களில் 83 பேர் மருத்துவத்துக்கு பின்னர் வீடு திரும்பியுள்ளனர்.

இதையும் படிங்க: மோடி பிரதமரான பின்பு இருதரப்பு உறவுகள் மோசமடைந்தது ஏன்? அசோக் கெலாட் கேள்வி

ABOUT THE AUTHOR

...view details