சமூக வலைதளங்களில், ஜூன் 1ஆம் தேதி முதல் அனைத்து வணிக வங்கிகளும் வாரத்தில் ஐந்து நாட்கள் மட்டுமே இயங்கும் என்றும், சனிக்கிழமைகளில் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும் என்று ஆர்.பி.ஐ உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியானது.
சனிக்கிழமைகளில் வணிக வங்கிகளை மூட உத்தரவிடவில்லை - ஆர்.பி.ஐ
புதுடெல்லி: வாரத்தில் ஐந்து நாட்கள் மட்டும் இயங்கும்படி வணிக வங்கிகளுக்கு எந்த விதமான உத்தரவும் பிறப்பிக்கவில்லை என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
ஆர்.பி.ஐ
இதனை ஆர்.பி.ஐ. தலைமை பொது மேலாளர் யோகேஷ் தயாள் மறுத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், "சமூக வலை தளங்களில் வணிக வங்கிகளுக்கு வாரத்தில் ஐந்து நாட்கள் மட்டும் இயங்கும்படி ஆர்.பி.ஐ உத்தரவிட்டுள்ளதாக பரவும் செய்தி தவறானது. அப்படி எந்த விதமான உத்தரவையும் நாங்கள் பிறப்பிக்கவில்லை" என அவர் தெரிவித்தார்.
Last Updated : Apr 21, 2019, 9:41 AM IST