அமெரிக்காவின் கலிபோர்னியா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களின் புதிய ஆய்வின்படி, கடைகளிலிருந்து நாம் வாங்கும் பாலை (காய்ச்சப்படுவதற்கு முன்) நீண்ட நேரம் அறை வெப்பநிலையில் வைத்திருந்தால், அதில் ஏராளமான அழிக்க முடியாத கிருமிகள் உருவாவது தெரியவந்துள்ளது.
இந்தப் பாலை மனிதர்கள் தொடர்ந்து உட்கொள்ளும்பட்சத்தில் அது தீர்க்க முடியாத சில நோய்களை உருவாக்கும் என்றும், இந்த ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. இந்த ஆய்வு மைக்ரோபியோம் இதழில் வெளியிடப்பட்டது.
இது குறித்து இந்த ஆய்வின் முதன்மை ஆராய்ச்சியாளர் ஜின்க்சின் லியு கூறுகையில், "நாங்கள் மக்களை பயமுறுத்த விரும்பவில்லை; நாங்கள் அவர்களுக்கு கற்பிக்கவே விரும்புகிறோம். நீங்கள் காய்ச்சப்படாத பாலை குடிக்க விரும்பினால், அதை குளிர்சாதன பெட்டியில் வைத்து குடிப்பது ஆண்டிபயாடிக் எதிர்ப்பு மரபணுக்கள் உருவாகும் அபாயத்தைக் குறைக்கும்" என்றார்.
உலகில் பலரும் காய்ச்சப்படாத பாலை அருந்துகின்றனர். இந்த பாலில் நோய்க்கிருமிகள் கொல்லப்பட்டிருக்காது. காய்ச்சிய பாலுடன் ஒப்பிடும்போது, நிறைய ஆரோக்கியமான பாக்டீரியாக்கள் காய்ச்சப்படாத பாலில் இருப்பதாக பொது மக்களுக்கு கூறப்படுகிறது.
ஆனால், இந்த ஆய்வின் முடிவுகள் அதைப் பிரதிபலிக்கவில்லை. மேலும் லியு கூறுகையில், "இந்த ஆய்வில் இரண்டு விஷயங்கள் எங்களை ஆச்சரியப்படுத்தின.