நூற்றாண்டு பழமைவாய்ந்த ரவிதாஸ் கோயில் இடிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து பலர் டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் காவல் துறைக்கும், போராட்டகாரர்களுக்கும் கைகலப்பு ஏற்பட்டது. இந்த போராட்டத்தில் ஈடுபட்ட பீம் ஆர்மியின் தலைவரான சந்திரசேகர் ஆசாத் உள்பட பலரை காவல் துறை கைது செய்தது.
ஒடுக்கப்பட்ட குரல்களை பாஜக நசுக்குகிறது' - ரவிதாஸ் கோயில் இடிப்பு
டெல்லி: ஒடுக்கப்பட்டவர்களின் குரல்களை பாஜக நசுக்குவதாக பிரியங்கா காந்தி தன் டவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.
Priyanka Gandhi
இதுகுறித்து காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி தன் ட்விட்டர் பக்கத்தில், "ஒடுக்கப்பட்டவர்களின் கலாச்சார பாரம்பரியமிகு சின்னமான ரவிதாஸ் கோயில் பாஜக அரசால் இடிக்கப்பட்டது. இதனை எதிர்த்து போராடிய மக்களை, பாஜக அரசு கைது செய்துள்ளது. ஒடுக்கப்பட்டவர்களை அவமானப்படுத்தும் செயலான இதனை பொறுத்துக்கொள்ள முடியாது. இது உணர்வுபூர்வமான விவகாரம்" என பதிவிட்டுள்ளார்.