பர்தாமன் (மேற்கு வங்கம்):அரிய வகை மஞ்சள் நிற ஆமை ஒன்று குளத்தில் மீன் பிடித்துக்கொண்டிருந்தவர் வலையில் சிக்கியுள்ளது.
முதலில் ஆமை சாம்பல் நிறத்தில் இருந்துள்ளது. ஆனால் பின்னர் அது மஞ்சள் நிறமாக மாறியுள்ளது. கிழக்கு பர்த்வானில் உள்ள பிளாக் எண் ஒன்றின் காளிகிராம் தாஸ்பூர் பகுதியில் இருந்து இந்த ஆமை மீட்கப்பட்டது.
பிக் பாஸ் வந்த வேடந்தாங்கல் நான்தானேடா.... ஷிவானி க்ளிக்ஸ்
பர்த்வான் வனத்துறை அலுவலர் டெபாஷிஸ் சர்மா இதுகுறித்த ட்வீட் செயததையடுத்து, இணையத்தை ஆக்கிரமித்துக்கொண்டது இந்த மஞ்சள் நிற அரிய வகை ஆமை. அவர் ட்விட்டர் பதிவில், மேற்கு வங்கத்திலிருந்து ஒரு மஞ்சள் நிற ஆமை மீட்கப்பட்டுள்ளதாக தெரிவித்திருந்தார்.
மேலும், இந்தாண்டு இதுவரை இரண்டு மஞ்சள் ஆமைகள் மீட்கப்பட்டுள்ளன என்றும், முந்தையது ஜூலை மாதம் ஒடிசாவின் பாலசோரில் இருந்து மீட்கப்பட்டது என்றும் தெரிவித்தார்.
உள்ளூர் வட்டார தகவல்களின்படி, ஆமை சாம்பல் நிறத்துடன் வெளியே வந்ததாகவும், ஆனால் பின்னர் அது மஞ்சள் நிறமாக மாறியது என்றும் கூறப்படுகிறது. பின்னர், இது வனத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது. இது ஒரு அரிய வகை ஆமை என்று வனத் துறையினர் கூறியுள்ளனர். இந்த நிறம் டைரோசின் நிறமி இல்லாத நிலையிலே அல்லது மரபணு மாற்றம் அல்லது பிறவி நோய் காரணமாக நிகழ்ந்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.