தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

எல்லைப் பகுதியில் மோதல்: இந்திய ராணுவ வீரர் மரணம் - இந்திய ராணுவ வீரர் மரணம்

லக்னோ: எல்லைப் பகுதியில் சீனாவுடன் ஏற்பட்ட மோதல் சம்பவத்தில் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் ஒருவர் வீர மரணம் அடைந்தார்.

soldier-martyred
soldier-martyred

By

Published : Aug 24, 2020, 1:59 AM IST

இந்தியா - சீனா எல்லைப் பகுதியான கல்வான் பள்ளத்தாக்கில் இரு நாட்டு ராணுவ வீரர்கள் மோதிக் கொண்டதில் இந்திய ராணுவத்தைச் சேர்ந்த 20 வீரர்கள் கொல்லப்பட்டனர். சீன தரப்பிலும் உயிரிழப்பு நிகழ்ந்ததாக அந்நாடு ஒப்புக் கொண்டது. இதனைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கிடையே பதற்றம் நிலவிவருகிறது.

இந்நிலையில், அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள மாங்கோ எல்லைப் பகுதியில் நடைபெற்ற மோதலில் இந்திய ராணுவத்தைச் சேர்ந்த வீரர் ஒருவர் வீர மரணம் அடைந்தார். அவர் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த முகேஷ் பாபு என்பது தெரியவந்துள்ளது.

கல்வான் மோதலைத் தொடர்ந்து, இவர் சமீபத்தில்தான் மாங்கோ பகுதிக்கு மாற்றப்பட்டார். பாபுவின் உடல் அவரது குடும்பத்தாரிடம் இன்று (ஆகஸ்ட் 24) ஒப்படைக்கப்படவுள்ளது. இந்த மோதலில் மேலும் நான்கு ராணுவ வீரர்கள் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.

இதையும் படிங்க:ஜம்மு காஷ்மீருக்கு மீண்டும் சிறப்பு அந்தஸ்து - ஆதரவு கொடுக்கும் சிதம்பரம்

ABOUT THE AUTHOR

...view details