தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

கோலாகலமாக நடைபெற்ற ராமோஜி ராவ் இல்லத் திருமண விழா! - daughter

ஹைதராபாத்: தென்னிந்திய திரைப்படத் துறையில் மிக முக்கிய இடம் வகிக்கும் ராமோஜி ராவின் இல்லத் திருமண விழா அரசியல் மற்றும் திரை பிரபலங்கள் சூழ ஏப்ரல் 20ஆம் தேதி ராமோஜி திரைப்பட நகரில் கோலகலமாக நடைபெற்றது.

ராமோஜி ராவ் இல்லத் திருமண விழா

By

Published : Apr 20, 2019, 11:25 PM IST

Updated : Apr 21, 2019, 11:50 AM IST

உலகின் மிகப்பெரிய திரைப்பட நகரான 'ராமோஜி ஃபிலிம் சிட்டி' ஹைதராபாத்தில் அமைந்துள்ளது. தென்னிந்திய திரைப்படங்களின் படப்பிடிப்பு பெரும்பாலும் இங்குதான் நடைபெறும்.

பாகுபலி, உள்ளிட்ட பிரமாண்ட படங்களும், ரெட், விஸ்வாசம், விவேகம் உள்பட தல அஜித்தின் பெரும்பாலான திரைப்படங்களும் இங்குதான் எடுக்கப்பட்டுள்ளன. அத்தகைய பிரபலமான ராமோஜி திரைப்பட நகர் நிறுவனர் ராமோஜி ராவின் பேத்தி கீர்த்தி சோஹானாவுக்கும், வினய் என்பவருக்கும் திருமணம் ஏப்ரல் 20ஆம் தேதி இந்தத் திரைப்பட நகரில் பிரமாண்டமாக நடைபெற்றது.

அரசியல் தலைவர்கள், திரை பிரபலங்கள், தொழிலதிபர்கள் உள்பட ஏராளமான நண்பர்களை ராமோஜி பெற்றுள்ளதால், திருமணத்திற்கு பல பிரபலங்கள் வருகை தந்தனர். இதற்காக பாதுகாப்புப் பணியில் ஆயிரக்கணக்கான காவல் துறையினர் குவிக்கப்பட்டனர். போக்குவரத்து மாற்றங்களும் ஆங்காங்கே மேற்கொள்ளப்பட்டன.

கோடை வெயில் வெளுத்து வாங்கும் நிலையில், ராமோஜி திரைப்பட நகரில் நடைபெற்ற திருமணத்திற்கு குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு, தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவ், ஆந்திரா முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, மகாராஷ்டிரா ஆளுநர் வித்யாசாகர் ராவ், தெலங்கானா மற்றும் ஆந்திர ஆளுநர் நரசிம்மன், இந்திய கிரிக்கெட் முன்னாள் வீரர் கபில் தேவ், நடிகர்கள் சிரஞ்சீவி, பவன் கல்யாண் என ஏராளமான பிரபலங்கள் வருகை தந்து மணமக்களை வாழ்த்தினர்.

ராமோஜி ராவ் இல்லத் திருமண விழா
Last Updated : Apr 21, 2019, 11:50 AM IST

ABOUT THE AUTHOR

...view details