இது தொடர்பாக ஹரித்வாரில் செய்தியாளர்களிடம் பேசிய ராம்தேவ், "அடுத்த 50 ஆண்டுகளில் இந்திய மக்கள் தொகை 150 கோடிக்கு மேல் செல்லக் கூடாது. அதனை சமாளிக்க நாம் தயாராகவில்லை. இதனை கட்டுக்குள் கொண்டுவர ஒரு குடும்பத்தில் மூன்றாவதாக பிறக்கும் குழந்தைக்கு வாக்குரிமை வழங்கவோ, தேர்தலில் பங்கேற்கவோ, அல்லது அரசின் எவ்வித சலுகையோ பெறக்கூடாத வகையில் சட்டமியற்ற வேண்டும்" என்றார்.
'3ஆவதாக பிறக்கும் குழந்தைக்கு வாக்குரிமை வழங்கக் கூடாது!' - பாபா ராம்தேவ் - population
ஹரித்வார்: இந்தியா மக்கள் தொகையை கட்டுப்பாட்டில் வைக்க, ஒரு குடும்பத்தில் மூன்றாவதாக பிறக்கும் குழந்தைக்கு வாக்குரிமை வழங்கப்படாது என சட்டமியற்ற அரசுக்கு பாபா ராம்தேவ் வலியுறுத்தியுள்ளார்.
பாபா ராம்தேவ்
தொடர்ந்து பேசிய அவர், மாட்டிறைச்சிக்கு முற்றிலும் தடை விதித்தால் மட்டமே இது தொடர்பான வன்முறை முடிவுக்கு வரும் என்று தெரிவித்தார்.