தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

'ராமர் கோயில் நிச்சயம் கட்டப்படும்!' -மோகன் பகவத் திட்டவட்டம் - ஆர்.எஸ்.எஸ் தலைவர்

ராஜஸ்தான்: அயோத்தியில் ராமர் கோயில் நிச்சயம் கட்டப்படும் என்று ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

மோகன் பகவத்

By

Published : May 28, 2019, 10:43 AM IST

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் பாஜக தனிப்பெரும்பான்மை கட்சியாக உருவெடுத்துள்ளது. 303 மக்களவைத் தொகுதிகளில் வெற்றிபெற்று அரசியல் அதிகாரத்தை கைப்பற்றியுள்ளது. இதனைத்தொடர்ந்து வருகின்ற 30ஆம் தேதி இரவு ஏழு மணிக்கு நரேந்திர மோடி இரண்டாவது முறையாக பிரதமராக பதவியேற்க உள்ளார்.

இந்நிலையில், ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் ஆர்.எஸ்.எஸ். கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்ட ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத், 'ராமர் கோயிலுக்கான பணிகளை உடனடியாக செய்ய வேண்டும். அதனை செய்துமுடிக்க வேண்டிய கடமை நமது கையில் உள்ளது. ராமர் நம்முடன் வாழ்ந்துவருகிறார். ராமர் கோயிலை கட்டி முடிக்க வேறு யாராவது நியமிக்கப்பட்டால் அவரை உன்னிப்பாக கவனிக்க வேண்டும்.

நாம் உறுதியுடனும், கவனத்துடன் செயல்பட வேண்டும். ராமர் கோயில் கட்டப்பட வேண்டும்; நிச்சயம் கட்டப்படும்' என்று அவர் தெரிவித்தார்.

ABOUT THE AUTHOR

...view details