இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், 'ஒரு புதிய அரசு ஆட்சியில் அமர்ந்தவுடன், அனைத்து கட்சித் தலைவர்களும் ஒன்று சேர்ந்து மக்களவை, சட்டப்பேரவைத் தேர்தல்களை பிப்ரவரி (அ) நவம்பர் மாதத்தில் நடத்துவது குறித்து கலந்தாலோசித்து முடிவெடுக்க வேண்டும்.
இது தேர்தல் பரப்புரைக்கு வசதியாக இருக்கும். மேலும், அப்போது மக்கள் வாக்களிக்கையில், வாக்குகளின் விழுக்காடும் அதிகரிக்கும். இதனால் வலிமையான ஜனநாயகம் அமையும்' என ட்வீட் செய்திருந்தார்.
இந்நிலையில், நேற்று அவர் செய்தியாளர்களை சந்திக்கையில், 'மக்களிடம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து அதிகளவு விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், ஏப்ரல்-மே மாதங்களில் கோடை காலங்களில் பொதுத்தேர்தல் நடத்துவதால் மக்கள் வாக்களிக்க ஆர்வம் காட்ட மாட்டார்கள். வாக்குன் விழுக்காட்டின் அளவு குறையவே வாய்ப்புள்ளது. எனவே இனிவரும் தேர்தல்களை பிப்ரவரி (அ) நவம்பர் மாதத்தில் நடத்த வேண்டும்' என வலியுறுத்தினார்.
நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெற்ற மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 11ஆம் தேதி மே19ஆம் தேதி ஞாயிற்றுக் கிழமையுடன் முடிவுற்றது. இதையடுத்து மே 23ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளது. இந்தத் தேர்தல் முடிவுகளை அடுத்து ஆட்சியில் எந்தக் கட்சி அமரப்போகிறது, அடுத்த பிரதமர் யார் என்று அனைத்து தரப்பினரிடமும் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.