மாநிலங்களவையின் மூன்றில் ஒரு பங்கு இடங்களுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடைபெறுவது வழக்கம். அதன்படி, 55 மாநிலங்களவை உறுப்பினரின் பதவிக்காலம் வரும் ஏப்ரல் மாதத்தில் நிறைவடையவுள்ளது.
தமிழ்நாட்டில் திருச்சி சிவா (திமுக), டி.கே. ரங்கராஜன் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்), விஜிலா சத்யானந்த் (அதிமுக), செல்வராஜ் (அதிமுக), முத்துக்கருப்பன் (அதிமுக), சசிகலா புஷ்பா (அதிமுகவிலிருந்து விலகி தற்போது பாஜகவில் உள்ளார்) ஆகியோரின் பதவிக்காலம் ஏப்ரல் 2ஆம் தேதியுடன் நிறைவடைகிறது.
காலியாகவுள்ள மாநிலங்களவை உறுப்பினர்கள் பதவிகளுக்கு வரும் 26ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. திமுக சார்பில் திருச்சி சிவா, அந்தியூர் செல்வராஜ், என்.ஆர். இளங்கோ ஆகியோர் போட்டியிடுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதிமுக சார்பில் வேட்பாளர்கள் இன்னும் அறிவிக்கப்படவில்லை.