ராஜ்நாத் சிங் 2014 ஆம் ஆண்டு முதல் 2019 ஆம் ஆண்டு வரை உள்துறை அமைச்சராக செயலாற்றி வந்தார். இந்நிலையில் அவர் பாதுகாப்புத் துறைக்கு மாற்றம் செய்யப்பட்டதை அடுத்து முதன்முறையாக அவர் சியாச்சின் பனியாறு பகுதிக்கு செல்லவுள்ளார்.
சியாச்சின் செல்கிறார் ராஜ்நாத் - சியாச்சின் பனிமலை
டெல்லி: பாதுகாப்புத் துறை அமைச்சராக பதவி ஏற்ற ராஜ்நாத் சிங் சியாச்சின் பனியாறு பகுதிக்கு செல்ல இருக்கிறார்.
rajnath
அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதா என்பதை அறிந்து கொள்ள அவர் அங்கு செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவருடன் இந்திய ராணுவ தளபதி பிபின் ராவத்தும் பல ராணுவ அலுவலர்களும் செல்ல இருப்பதாக கூறப்படுகிறது. நிலத்தில் இருந்து 23,000 அடி உயரத்தில் இருக்கும் சியாச்சின் பனியாறு பகுதியில் சுவாசிப்பது கூட கடினமான ஒன்றாக பார்க்கப்படுகிறது.
நிர்மலா சீதாராமன் பாதுகாப்புத் துறை அமைச்சராக இருந்தபோது சியாச்சின் பனிமலைக்கு சென்றது குறிப்பிடத்தக்கது.