17ஆவது மக்களவைத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி மாபெரும் வெற்றிபெற்று ஆட்சியமைத்துள்ளது. மே 30ஆம் தேதி மோடியின் பதவியேற்பு விழாவில் மத்திய அமைச்சர்களுக்கும் பதவிப் பிரமாணம் செய்து வைக்கப்பட்டது. இதில் ராஜ்நாத் சிங் பாதுகாப்புத் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார். அவர் இன்று அலுவலகப் பொறுப்பேற்கவுள்ள நிலையில், தேசிய போர் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார்.
தேசிய போர் நினைவிடத்தில் ராஜ்நாத் சிங் மரியாதை - பாஜக
டெல்லி: பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய போர் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார்.
rajnath singh
இதில் அவருடன் ராணுவத் தளபதி பிபின் ராவத், விமானப்படைத் தளபதி பி.எஸ்.தானோ, கடற்படைத் தளபதி கரம்பிர் சிங் உள்ளிட்டோர் பங்கேற்று மரியாதை செலுத்தினர். ராஜ்நாத் சிங் இன்று அதிகாரப்பூர்வமாக அலுவலகப் பொறுப்பேற்க இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.