தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

முடிவுக்கு வந்த ராஜஸ்தான் அரசியல் குழப்பம்: அசோக் கெலாட் - சச்சின் பைலட் சந்திப்பு! - அசோக் கெலாட் - சச்சின் பைலட் மோதல்

ராஜஸ்தான் அரசியலில் நிலவி வரும் அரசியல் குழப்பத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், காங்கிரஸ் கட்சி எம்எல்ஏக்கள் கூட்டத்தில் முதலமைச்சர் அசோக் கெலாட், சச்சின் பைலட் ஆகியோர் சந்தித்தனர்.

rajasthan-sachin-pilot-reaches-cm-gehlots-residence-to-attend-congress-legislature-party-meet
rajasthan-sachin-pilot-reaches-cm-gehlots-residence-to-attend-congress-legislature-party-meet

By

Published : Aug 14, 2020, 5:22 AM IST

ராஜஸ்தானில் ஆட்சி செய்துவரும் காங்கிரஸ் கட்சியின் முதலமைச்சர் அசோக் கெலாட்டை எதிர்த்து முன்னாள் துணை முதலமைச்சர் சச்சின் பைலட் போர்க்கொடி தூக்கினார். இதனால் ராஜஸ்தான் அரசியலில் பரபரப்பு ஏற்பட்டது.

சில நாள்களுக்கு முன்பாக சச்சின் பைலட், முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி ஆகியோரை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பில் சச்சின் பைலட்டிடம் சமரசம் பேசப்பட்டதாகத் தெரிகிறது.

அசோக் கெலாட் - சச்சின் பைலட் சந்திப்பு

இந்நிலையில், ராஜஸ்தான் சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் இன்று கூடுகிறது. அதில், முதலமைச்சர் அசோக் கெலாட் தனது பெரும்பான்மையை நிரூபிக்க உள்ளார்.

அதற்கு முன்னதாக நேற்று (ஆக.13) மாலை காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டம் நடந்தது. அதில் சச்சின் பைலட் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டதையடுத்து, அவர் எம்எல்ஏக்கள் கூட்டத்தில் பங்கேற்றார். அவரை முதலமைச்சர் அசோக் கெலாட் வரவேற்றார்.

இதன்மூலம் ராஜஸ்தான் அரசியலில் ஒரு மாதமாக நிலவி வந்த அரசியல் குழப்பம் முடிவுக்கு வந்துள்ளது.

இதையும் படிங்க:ஜனநாயகத்தை காக்க மறப்போம், மன்னிப்போம் - முதலமைச்சர் அசோக் கெலாட்

ABOUT THE AUTHOR

...view details