தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

மணிக்கட்டுகள் அறுக்கப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சிறுமி - குற்றவாளியைத் தேடி வரும் காவல் துறையினர் - போக்சோ

ராஜஸ்தான் மாநிலத்தில் 17 வயது சிறுமி மணிக்கட்டுகள் அறுக்கப்பட்டு, பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவத்தில் போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து காவல் துறையினர் குற்றவாளியைத் தேடி வருகின்றனர்.

Breaking News

By

Published : Sep 10, 2020, 8:41 PM IST

ராஜஸ்தான் மாநிலம், சிகார் மாவட்டத்தில் 17 வயது சிறுமி ஒருவர், தனது வீட்டருகே அமைந்துள்ள சந்தையின் அடித்தளத்தில் மயங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டார்.

சில மணி நேரங்களாக அச்சிறுமியைக் காணாமல் அவரது குடும்பத்தார் தேடி வந்த நிலையில், கைகள் அறுபட்ட நிலையில், அவரது வீட்டருகே உள்ள சந்தையின் அடித்தளத்தில் சிறுமி கண்டெடுக்கப்பட்டுள்ளார். அதனைத் தொடர்ந்து சிறுமியின் உறவினர்கள் அவரை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று அனுமதித்தனர்.

அதனைத் தொடர்ந்து காவல் துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, அவர்கள் அங்கு வந்து மேற்கொண்ட விசாரணையில், சிறுமியின் வீட்டிற்கு அருகே பழைய பொருள்கள் அங்காடி வைத்திருக்கும் சுனில் என்பவர் தன்னை காலை வேளையில் வந்து சந்திக்குமாறு போன் செய்து அழைத்ததாகவும், பிறகு தன்னை சந்தையின் அடித்தளத்திற்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் அச்சிறுமி வாக்குமூலம் அளித்துள்ளார்.

அதனைத் தொடர்ந்து சிறுமிக்கு மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, போக்சோ சட்டத்தில் சுனில்மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. தப்பி ஓடிய குற்றவாளி சுனிலை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க :தொழிலதிபர் மீது ஹர்பஜன் சிங் அளித்த புகார் மத்திய குற்றப்பிரிவிற்கு மாற்றம்?

ABOUT THE AUTHOR

...view details