தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

மருத்துவமனையில் தீ விபத்து: நல்வாய்ப்பாக 25 குழந்தைகள் உயிர்பிழைப்பு! - மருத்துவமனையில் தீ விபத்து

ஜெய்பூர்: அதரஷ் நகரில் அமைந்துள்ள தனியார் மருத்துவமனையில் இன்று அதிகாலை ஏற்பட்ட திடீர் தீவிபத்திலிருந்து, 25 குழந்தைகள் நல்வாய்ப்பாக உயிர்பிழைத்தனர்.

Fire

By

Published : Jul 29, 2019, 12:14 PM IST

ராஜஸ்தான் மாநிலம் தலைநகரான ஜெய்பூரின் அதரஷ் நகரில் தனியார் மருத்துவமனை ஒன்று உள்ளது. இங்குள்ள தீவிர சிகிச்சைப் பிரிவில் 25 குழந்தைகள் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

இந்நிலையில், இன்று அதிகாலை திடீரென ஏற்பட்ட மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது. இதனையடுத்து உடனடியாக மருத்துவமனை ஊழியர்கள் குழந்தைகளை தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றினார்.

இந்த விபத்தில் எந்தவித உயிர் சேதமும் ஏற்படவில்லை. மேலும், குழந்தைகளுக்கு பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை.

ABOUT THE AUTHOR

...view details