ராஜஸ்தானில் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடந்துவருகிறது. இம்மாநிலத்தில் ஏற்பட்ட அரசியல் குழப்பத்தையடுத்து துணை முதலமைச்சர் சச்சின் பைலட் மற்றும் அமைச்சர்கள் இருவர் அதிரடியாக கட்சி மற்றும் ஆட்சி பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டனர்.
இந்த விவகாரத்தில் மாநில அரசை விமர்சித்து மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அந்தப் பதிவில், “ராஜஸ்தான் அரசு தறிகெட்டு ஓடுவது வருத்தமளிக்கிறது. முதலமைச்சர் பைலட்டை துரத்துவதில் மும்முரம் காட்டுகிறார்” என தெரிவித்திருந்தார்.
மற்றொரு பதிவில், கிளர்ச்சியை பார்த்தால் அரண்மனையில் நிறைய அதிருப்தியாளர்கள் இருப்பது போல் தெரிகிறது. தலைமை ஆசிரியர் மகன் பள்ளியில் எவ்வாறு முதலிடம் பெறுகிறான்?” எனவும் கேள்வியெழுப்பியுள்ளார்.