தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

தெலங்கானாவில் மழை வெள்ளத்தில் சிக்கி 32 பேர் உயிரிழப்பு! - ஆந்திரா

ஹைதராபாத்: தெலங்கானாவில் மழை வெள்ளத்தில் சிக்கி இதுவரை 32 பேர் உயிரிழந்துள்ளனர்.

Rains claim 30 lives in Telangana, 19 of them in Hyderabad
Rains claim 30 lives in Telangana, 19 of them in Hyderabad

By

Published : Oct 15, 2020, 12:35 PM IST

ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களில் கடந்த சில நாள்களாகப் பெய்துவரும் கனமழையால் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கோதாவரி நதியின் கிழக்குப் பகுதியில் வெள்ளத்தில் ஏராளமான வீடுகள் மிதக்கின்றன. ஒரு பழைய கட்டடமும் இரண்டு கூரைகளும் இடிந்து விழுந்தன. ஹைதராபாத்தில் வீடுகளுக்குள்ளேயும் வெள்ளம் புகுந்தது.

ராணுவமும் பேரிடர் மீட்புப் படையினரும் வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்டுவருகின்றனர். செஞ்சிலுவைச் சங்கம் போன்ற தொண்டு நிறுவனங்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவு, மருத்துவ வசதிகளை அளித்துவருகின்றன.

இந்நிலையில் இதுவரை ஹைதராபாத்தில் 19 பேர் உள்பட தெலங்கானாவில் 32 பேர் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். இதில் ஒன்பது பேர் ஹைதராபாத்தில் சுவர் இடிந்து விழுந்ததில் உயிரிழந்துள்ளனர்.

இதையும் படிங்க...ஆந்திரா, தெலங்கானா முதலமைச்சர்களிடம் மீட்பு பணி குறித்து விசாரித்த பிரதமர்!

ABOUT THE AUTHOR

...view details