வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் தீவிரமாக மாறி ஆந்திராவின் வடக்கு கடலோர பகுதியான காக்கிநாடாவில் நேற்று கரையை கடந்தது. காலை 6:30 மணி முதல் 7:30 மணி வரையிலான காலகட்டத்தில், 75 கிலோ மீட்டர் வேகத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடந்துள்ளது. இதனைத் தொடர்ந்து, ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களில் பலத்த மழை பெய்துவருகிறது.
இதன் காரணமாக தெலங்கானாவில் மட்டும் இதுவரை, 15 பேர் உயிரிழந்துள்ளனர். பெரும்பாலான பகுதிகள் வெள்ளத்தில் மிதந்துவருகின்றன. பல இடங்களில் வீடு இடிந்து விழுந்ததுள்ளது. இதற்கிடையே, தனியார் நிறுவனங்கள், அலுவலகங்கள் ஆகியவற்றுக்கு அக்டோபர் 15, 16 ஆகிய தேதிகளில் விடுமுறை அறிவித்து மாநில அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.