மேற்கு வங்க மாநிலத்தில் கரோனா பாதிப்பு குறித்தும் ஊரடங்கு தளர்வு குறித்தும் அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி பேசினார். அப்பொழுது, "சட்டம் என்பது அனைவருக்கும் பொதுவானது என்னும்போது, ஏன் ரயில்களில் பயணிகள் குவிக்கப்பட்டு அவர்களது சொந்த ஊர்களுக்கு அனுப்பப்படுகின்றனர்?
இந்தியன் ரயில்வே நிர்வாகம் தகுந்த இடைவெளியை குடிபெயர் தொழிலாளர்கள் பயணிக்கும் ரயில்களில் மட்டும் ஏன்கடைப்பிடிக்கவில்லை, அவர்களுக்குத் தேவையான உணவுப்பொருள்கள், குடிநீரைக்கூட அளிக்க ஏன்மனம் வரவில்லை?
இந்தியன் ரயில்வே ஷ்ராமிக் சிறப்பு ரயில்களை இயக்குகிறதா அல்லது கரோனா அதிவிரைவு ரயில்களை இயக்குகிறதா? என எனக்குச் சந்தேகம் எழுகிறது. நானும் ஒருமுறை ரயில்வே அமைச்சராகப் பணியாற்றியுள்ளேன். அப்பொழுது மக்களின் தேவைகளுக்காக ரயில் பெட்டிகளின் எண்ணிக்கையை அதிகரித்துள்ளேன்.
ஆனால், இந்தப் பெருந்தொற்றின் காலத்திலும் மத்திய அரசு இதுபோன்ற நடவடிக்கைகளில் ஏன்அக்கறை காட்டுவதில்லை? ரயிலில் பயணிக்கும் அதிகப்படியான மக்கள் கரோனா தொற்றால் அதிகம் பாதிப்படைந்துள்ள பகுதிகளிலிருந்து சொந்த ஊர் திரும்புகின்றனர் என்பதை மத்திய அரசும், ரயில்வே நிர்வாகமும் கவனத்தில்கொள்ளட்டும்.