மேற்கு மண்டல ரயில்வே துறை, நேற்று முதல் அகமதாபாத்-மும்பை கர்நாவதி எக்ஸ்பிரஸில் பயணிகள் ரயிலிலேயே ஷாப்பிங் செய்யும் சேவையைத் தொடங்கியுள்ளது.
கிஃப்ட் வாங்க மறந்துட்டீங்களா! ஊருக்குப் போகும்போது ரயிலிலேயே வாங்கலாம்...
டெல்லி: பயணிகளைக் கவரும் வகையில் ரயில்வே நிர்வாகம், பயணம் மேற்கொள்ளும் போது ஷாப்பிங் செய்யும் புது வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.
இதுகுறித்து மேற்கு மண்டல ரயில்வே துறை அலுவலர் ஒருவர் கூறுகையில், அகமதாபாத் - மும்பை சென்ட்ரல் இடையே செல்லும் கர்நாவதி எக்ஸ்பிரஸில் இந்த சேவை சோதனை அடிப்படையில் தொடங்கப்பட்டுள்ளதாகவும், இந்த சேவை பயணிகளுக்குப் பயணம் செய்யும்போது அவசரமாகத் தேவைப்படும் பொருட்களை வாங்குவதற்கான வாய்ப்பை வழங்கும் என்றார்.
மேலும் இந்த சேவையில் அனைத்து வகையான டிஜிட்டல் முறையிலும் பயனாளர்கள் பொருட்களுக்கான கட்டணத்தைச் செலுத்தலாம். இந்தச் சேவையில் தற்போது, வீட்டுக்குத் தேவையான பொருட்கள், அழகுசாதனப் பொருட்கள், மருந்துகள், ஸ்டேஷனரி பொருட்கள், இனிப்புகள் கிடைக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.