காணொலி மூலம் இந்தியத் தொழில்துறை கூட்டமைப்பு (சிஐஐ) ஏற்பாடு செய்த இரண்டாவது கட்டக் கூட்டத்தில் உரையாற்றிய ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயல், ரயில் தளவாடத் துறையில் செலவு குறைந்த சேவைகளை வழங்குவதற்கும், தளவாடச் செலவுகளைக் குறைப்பதற்கும் ரயில்வேயுடன் ஒத்துழைப்பு வழங்குமாறு தனியார் தொழில்துறை தலைவர்களை கேட்டுக்கொண்டார்.
இந்தியாவின் வளர்ச்சி இயந்திரம் ரயில்வே துறை - பிரதமர் - சரக்கு ரயில் சேவை
டெல்லி : இந்தியாவின் வளர்ச்சி இயந்திரம் ரயில்வே துறைதான் என பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் தெரவித்துள்ளதாக ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயல் கூறியுள்ளார்.
கரோனா காலத்தை நல்ல முறையில் பயன்படுத்திக்கொண்டு, சிறப்பு ஷ்ராமிக் ரயில், சரக்கு ரயில் சேவைகளை அதிகப்படுத்துதல், ரயில்வே கொள்கையில் சில மாற்றங்களைக் கொண்டுவந்து தனியார் நிறுவனங்களுடன் இணைந்து தொழில்நுட்ப ரீதியாக ரயில்வே துறையின் உள்கட்டமைப்பை மேம்படுத்துதல் போன்றவற்றை ரயில்வே துறை செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
நாட்டின் வளர்ச்சி இயந்திரம் ரயில்வே துறைதான் என்று பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்துள்ளதாகக் கூறிய பியூஷ் கோயல், வலிமைமிக்க தொழில்நுட்பத்துடன் கூடிய ரயில்சேவையை பொதுமக்களுக்கு வழங்குவதே தங்களது இலக்கு என்றும், கரியமில வாயு இல்லா ரயில்வே இயக்கத்தை உருவாக்கும் முனைப்பில் ரயில்வே அமைச்சகம் செயல்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.