நாடு முழுவதும் கரோனா தீநுண்மியின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. இதனைக் கட்டுப்படுத்தும் நோக்கில் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகின்றன.
இந்நிலையில், டெல்லியில் உள்ள ரயில்வே அமைச்சக தலைமையகத்தில் பணிபுரியும் மூத்த அலுவலர் ஒருவருக்கு கரோனா பாதிப்பு இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.
இது குறித்து ரயில்வே அமைச்சகம் வெளியிட்டுள்ள உத்தரவில், "ரயில்வேயில் பணிபுரியும் அலுவலருக்கு கரோனா பாதிப்பு இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.
இதனால், தொற்றால் பாதிக்கப்பட்டவர் பயன்படுத்திய அறை உள்ளிட்ட பகுதிகளைத் தீவிரமாகச் சுத்திகரிப்பதற்காக ரயில்வே தலைமையகத்தில் உள்ள அனைத்து அலுவலகங்களையும் மே 26, 27 ஆகிய தேதிகளில் மூட முடிவுசெய்யப்பட்டுள்ளது" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.