இது குறித்து அவரது ட்விட்டர் பக்கத்தில், ‘நான் காங்கிரஸ் கட்சியினரை ஒடிசா, ஆந்திரா, மேற்கு வங்கம் மக்களிடம் ஃபோனி புயல் குறித்து எச்சரிக்கைவிடும்படி கூறியுள்ளேன். உதவி தேவைப்படுவோருக்கு உதவி செய்யவும் வலியுறுத்தியுள்ளேன்‘ எனத் தெரிவித்துள்ளார்.
ராகுலின் ’ஃபோனி புயல்’ ட்வீட் - Rahul Gandhi
டெல்லி: அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஃபோனி புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக பிரார்த்தனை செய்வதாக ட்வீட் செய்துள்ளார்.
ராகுல் காந்தி
மேலும், மக்களே பத்திரமாக இருங்கள், இந்த இயற்கைப்பேரிடர் விரைவாக கடந்துவிடும். நீங்கள் எப்பொழுதும் என் நினைவில் இருக்கிறீர்கள். உங்களுக்காக நான் பிரார்த்தனை செய்துகொண்டிருக்கிறேன் என ட்வீட் செய்துள்ளார்.