கன்னியாகுமரி மக்களவை தொகுதி உறுப்பினரும் தொழிலதிபருமான வசந்தகுமார் (70), கரோனா வைரஸ் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இன்று (ஆகஸ்ட் 28) காலமானார். அவருக்கு பல்வேறு தலைவர்கள் இரங்கல் செய்தி வெளியிட்டு வருகின்றனர்.
மக்களுக்கு சேவை செய்யும் வசந்தகுமாரின் கொள்கை என்றென்றும் நிலைத்திருக்கும் - ராகுல் காந்தி - Rahul Gandhi
டெல்லி: மக்களுக்கு சேவை செய்யும் காங்கிரஸ் கொள்கை மீது வசந்தகுமார் கொண்ட உறுதி என்றென்றும் நிலைத்திருக்கும் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
இது குறித்து ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில், "கன்னியாகுமரி மக்களவை தொகுதி உறுப்பினர் வசந்தகுமார் கரோனாவால் உயிரிழந்த செய்தியை கேட்டு அதிர்ச்சி அடைகிறேன். மக்களுக்கு சேவை செய்யும் காங்கிரஸ் கொள்கை மீது வசந்தகுமார் கொண்ட உறுதி எங்கள் மனதில் என்றென்றும் நிலைத்திருக்கும். அவரின் குடும்பத்தாருக்கும் நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்" என பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: வசந்தகுமாரின் சமூக செயல்பாடுகள் மதிக்கத்தக்கவை - மோடி புகழ் அஞ்சலி