முன்னாள் பிரதமரான ராஜீவ் காந்தியின் பிறந்தநாளான இன்று காங்கிரஸ் கட்சியின் கனவுத்திட்டமான 'நியாய்' சத்தீஸ்கர் மாநிலத்தில் அமலுக்குவருகிறது. காங்கிரஸ் ஆளும் சத்தீஸ்கர் மாநிலத்தில் நடைபெறும் இதன் தொடக்கவிழாவில் அம்மாநில முதலமைச்சர் பூபேஷ் பேகல் பங்கேற்கிறார். இந்தத் திட்டத்தை காணொலி காட்சி மூலம் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் எம்.பி. ராகுல் காந்தி தொடங்கிவைக்கின்றனர்.
ராஜீவ் காந்தி கிசான் நியாய் யோஜ்னா என்ற பெயரில் தொடங்கப்படும் இந்தத் திட்டத்தின் மூலம் சுமார் 19 லட்சம் விவசாயிகள் பயன்பெறுவார்கள். இந்த திட்டத்தின் மூலம் சத்தீஸ்கரில் உள்ள நெற்பயிர் விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.10,000 உதவித்தொகை வழங்கப்படுகிறது. அதேபோல் கரும்பு விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.13,000 வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.