தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

தேசிய குடிமக்கள் பதிவேடு: அரசு மீது ராகுல் கடும் தாக்கு!

டெல்லி: தேசிய குடிமக்கள் பதிவேடு மற்றும் மக்கள் தொகை பதிவேடு ஆகியவை பணமதிப்பிழப்பு நடவடிக்கையைக் காட்டிலும் பேரழிவு என்று காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி, மத்திய அரசைக் கடுமையாக விமர்சித்துள்ளார்.

Rahul slams govt over NPR, NRC; terms it as 'disastrous'
Rahul slams govt over NPR, NRC; terms it as 'disastrous'

By

Published : Dec 29, 2019, 7:37 AM IST

காங்கிரஸ் கட்சி தொடங்கப்பட்ட தினம் நேற்று (டிச. 28) கொண்டாடப்பட்டது. டெல்லி காங்கிரஸ் தலைமையகத்தில் ராகுல் காந்தி செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது அவர், “மத்திய அரசின் சட்டம் நீங்கள் இந்தியர் என்று நிரூபியுங்கள் என்பது போல் உள்ளது. அவர் (பிரதமர் நரேந்திர மோடி) தனது 15 நண்பர்களுக்காக ஏழை, எளிய மக்களின் ஆவணங்களைக் கோருகிறார். தேசிய குடிமக்கள் பதிவேடு மற்றும் மக்கள் தொகை பதிவேடு, 2016ஆம் ஆண்டு ரூபாய் நோட்டுகள் தடை செய்யப்பட்டதை விட பேரழிவு. அது ஏழைகளுக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும்” என்றார்.

இதையும் படிங்க: சட்டவிரோத குடியேறிகளை வெளியேற்றுவதில் எங்களுக்கு எந்த சிக்கலும் இல்லை - அசாதுதீன் ஓவைசி!

ABOUT THE AUTHOR

...view details