காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, டெல்லியிலுள்ள ஹூமாயூன் சாலையில் நேற்று மாலை சென்றுள்ளார். அப்போது, வழியில் அடிப்பட்ட நிலையில் ஒருவர் நின்றுகொண்டிருந்ததை அவர் பார்த்துள்ளார். உடனே தன் காரை நிறுத்தி அவரை ஏற்றிய பிறகுதான் தெரிந்ததுள்ளது அடிப்பட்டவர் நாளிதழ் ஒன்றின் உரிமையாளர்ராஜேந்திரா வியாஸ் என்று.
பத்திரிகையாளரின் ரத்தத்தை துடைத்த ராகுல் காந்தி
டெல்லி: சாலையில் அடிப்பட்டுகிடந்த பத்திரிகையாளரை ராகுல் காந்தி தன் காரில் ஏற்றிக் கொண்டு எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற சம்பவம் இணையத்தில் ட்ரெண்ட் ஆகி வருகிறது.
பத்திரிகையாளரின் ரத்தத்தை துடைத்த ராகுல் காந்தி
காரில் சென்று கொண்டிருந்த போது ராஜேந்திரா வியாஸின் தலையில் ரத்தம் வழிய அதனை ராகுல் தன் கைக்குட்டையை வைத்து துடைத்துள்ளார். இதை காரில் இருந்த ஒருவர் விடியோ எடுக்க ராஜேந்திரா வியாஸ், மறுபடியும் தன் ரத்தத்தை துடைக்குமாறு ராகுலிடம் கேட்டுள்ளார். சிரித்தபடியே ராகுலும் ரத்தத்தை தன் கைக்குட்டையால் துடைத்துள்ளார்.
பிறகு, ராஜேந்திரா வியாஸை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று ராகுல் சேர்த்துள்ளார். இந்த சம்பவம் இணையத்தில் ட்ரெண்ட் ஆகி வருகிறது.