பிஎம் கேர்ஸ் நிதியத்தின் வாயிலாக உள் நாட்டில் தயாரிக்கப்படும் வெண்டிலேட்டர்களை வாங்க மத்திய அரசு முடிவு செய்து அக்வா என்ற நிறுவனத்தை அதற்காகத் தேர்வு செய்தது. ஆனால், அந்த நிறுவனத்தில் இருந்து கொள்முதல் செய்யப்படும் வெண்டிலேட்டர்கள் தரம் குறைந்தவையாக இருப்பதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன.
இந்தச் சூழ்நிலையில், அந்நிறுவனத்தின் முன்னாள் ஊழியர் எழுதி வெளியான கட்டுரை ஒன்றில், அக்வா நிறுவனம், தனது மென்பொருள் மூலம் வெண்டிலேட்டர்களில் உள்ள குறைபாடுகளை மறைக்கப்பதாகக் கூறப்பட்டுள்ளது.
இந்தக் கட்டுரையை தனது ட்விட்டர் பக்கத்தில் சுட்டிக் காட்டியுள்ள ராகுல் காந்தி, ”இந்தியர்களின் வாழ்க்கையை ஆபத்தில் தள்ளுவது, மக்கள் பணத்தை தரம் குறைந்த வெண்டிலேட்டர்கள் வாங்கப் பயன்படுத்துவது உள்ளிட்டவை தான், பிஎம் கேர்ஸ் நிதியத்தின் திறமைகள்” எனத் தெரிவித்துள்ளார்.