அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றிபெற்றுள்ள ஜனநாயக கட்சியன் ஜோ பைடனுக்கு உலக தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துவருகின்றனர். இந்நிலையில், பைடன் அமெரிக்காவை ஒன்றிணைப்பார் என ராகுல் காந்தி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
பைடன் அமெரிக்காவை ஒன்றிணைப்பார் - ராகுல் காந்தி நம்பிக்கை - Rahul on america election
டெல்லி: அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றிபெற்றுள்ள பைடன் அந்நாட்டை ஒன்றிணைப்பார் என ராகுல் காந்தி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
ராகுல் காந்தி
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பைடனுக்கு வாழ்த்துகள். அமெரிக்காவை ஒற்றுமைப்படுத்துவதோடு சிறப்பாகவும் திறமையாகவும் வழிநடத்துவார் என நம்புகிறேன்" என பதிவிட்டுள்ளார்.
கமலா ஹாரிஸுக்கு வாழ்த்து தெரிவித்த ராகுல் காந்தி, அமெரிக்காவின் முதல் பெண் துணை அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கமலா ஹாரிஸ் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் என்பது பெருமையளிக்கிறது என்றார்.