தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

பாலகோட் தாக்குதலில் மச்சான் இறந்தது போல் ராகுல், கெஜ்ரிவால் கவலை -அமித் ஷா - Balakot airstrike

டெல்லி: பாலகோட் தாக்குதலில் ராகுல் காந்தி, அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோரின் மச்சான்கள் இறந்தது போன்று அவர்கள் சோகமடைந்தனர் என பாஜக தேசிய தலைவர் அமித் ஷா விமர்சித்தார்.

பாலகோட் தாக்குதலில் மச்சன் இறந்தது போல் ராகுல், கெஜ்ரிவால் கவலை -அமித் ஷா

By

Published : May 2, 2019, 11:13 AM IST

Updated : May 2, 2019, 1:10 PM IST

மக்களவைத் தேர்தலையொட்டி டெல்லியில் பாஜக தலைவர் அமித் ஷா அக்கட்சி வேட்பாளர்களை ஆதரித்து நேற்று பரப்புரை மேற்கொண்டார்.

அப்போது பேசிய அவர், ’புல்வாமா தாக்குதல் நடந்து 13 நாட்கள் கழித்து பாகிஸ்தான் எல்லை பகுதியான பாலகோட்டில் இந்திய விமானப் படை தாக்குதல் நடத்தியது. இதில் பயங்கரவாதிகள் முகாம் அழிக்கப்பட்டது.

இதனால் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும், ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த கெஜ்ரிவாலும் சோகமடைந்தனர். அவர்கள் சோகமடைந்தது எப்படி எனக்கு தெரியும் என்றால், காங்கிரஸ் அலுவலகம், ஆம் ஆத்மி அலுவலகங்களிலிருந்து அழுகை சத்தம் கேட்டது’ என்று விமர்சித்தார்.

மேலும், பாலகோட் தாக்குதலில் ராகுல் காந்தி, அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோரின் மச்சான்கள் இறந்தது போன்று அவர்கள் சோகமடைந்தனர் என அவர் குற்றம்சாட்டினார்.

Last Updated : May 2, 2019, 1:10 PM IST

ABOUT THE AUTHOR

...view details