இது குறித்து #SpeakUpForStudents என்ற ஹேஷ்டேக்கில் வீடியோ வெளியிட்டுள்ள அவர் ராகுல் காந்தி, “கரோனா காலத்தில் தேர்வுகளை நடத்துவது நியாமற்றது. மாணவர்கள், கல்வியாளர்களின் குரல்களை யுஜிசி செவி கொடுத்து கேட்க வேண்டும். தேர்வுகளை ரத்து செய்து முந்தைய மதிப்பெண் அடிப்படையில் தேர்ச்சியை அறிவிக்க வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.
தேர்வுகளை ரத்து செய்ய ராகுல் காந்தி வலியுறுத்தல்! - காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி
டெல்லி: கரோனா பரவல் காரணமாக பல்கலைக்கழக தேர்வுகளை ரத்து செய்து, முந்தைய மதிப்பெண்கள் அடிப்படையில் மதிப்பெண்கள் வழங்க வேண்டும் என யுஜிசியை காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார்.
பல்கலை. தேர்வுகளை ரத்து செய்ய ராகுல் காந்தி வலியுறுத்தல்!
இதற்கு ஆதரவு தெரிவித்துள்ள முன்னாள் மத்திய அமைச்சர் ஆனந்த் சர்மா, ஆறு மாத கல்வி கட்டணம், தேர்வு ரத்தை தான் ஆதரிப்பதாகவும், கல்வியை காப்பாற்ற மத்திய, மாநில அரசுகள் சீரிய முயற்சியை கையில் எடுக்க வேண்டும் எனவும் பேசி வீடியோவை பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க...இந்தியாவில் 8 லட்சத்தை நெருங்கும் கரோனா பாதிப்பு!