டெல்லி ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, உடல்நலக்குறைவு காரணமாக இன்று உயிரிழந்தார். பிரணாப்பின் மறைவுக்கு பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இதுகுறித்து ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில், "முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் இறப்பு செய்தி நாட்டை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
பிரணாப்பின் இறப்பு செய்தி நாட்டை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது - ராகுல் காந்தி
டெல்லி: முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப்பின் இறப்பு செய்தி கேட்டு நாடு சோகத்தில் ஆழ்ந்துள்ளது என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
ராகுல் காந்தி
நாட்டு மக்களுடன் இணைந்து அவருக்கு அஞ்சலி செலுத்துகிறேன். அவரின் குடும்பத்தாருக்கும், நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்" என பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: நாட்டின் வளர்ச்சியில் நிலையான தடம் பதித்தவர் பிரணாப் - பிரதமர் மோடி புகழாரம்