மக்களவைத் தேர்தலில் சொந்த தொகுதியான அமேதியில் தோற்ற ராகுல் காந்திக்கு, வயநாடு தொகுதி மாபெரும் வெற்றியைத் தந்தது. அந்தத் தொகுதி வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க ஜூன் முதல் வாரத்தில் ராகுல் அங்கு வருகை தரவுள்ளார் என கேரள காங்கிரஸ் தலைவர் ரமேஷ் சென்னிதலா தகவல் தெரிவித்துள்ளார். கேரளாவின் 20 மக்களவைத் தொகுதிகளில் 19 இடங்களை ஐக்கிய முற்போக்குக் கூட்டணி வென்றபோது அவர் இந்தத் தகவலை குறிப்பிட்டிருந்தார்.
வயநாடு செல்கிறார் ராகுல்: காரணம் இதுதான்?
மக்களவைத் தேர்தலில் மாபெரும் வெற்றியை தந்த வயநாடு தொகுதி மக்களை சந்திக்க காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, ஜூன் முதல் வாரத்தில் அங்கு செல்ல இருக்கிறார்.
மே 1 அல்லது மே 3ஆம் தேதிகளில் ராகுல் காந்தி வயநாடுக்கு வருகை தருவார் என கேரள காங்கிரஸ் வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன. எந்த மக்களவைத் தேர்தலிலும் இல்லாத அளவு ராகுல் காந்தி வயநாடு தொகுதியில் நான்கு லட்சத்து 31 ஆயிரத்து 770 வாக்குகள் வித்தியாத்தில் வெற்றிபெற்றார். அவருக்கு எதிராக போட்டியிட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் பி.பி.சுனீர் இரண்டு லட்சத்து 74 ஆயிரத்து 597 வாக்குகள் பெற்றார். வயநாடு தொகுதியில் ராகுல் பெற்ற மொத்த வாக்குகளின் எண்ணிக்கை ஏழு லட்சத்து ஆறாயிரத்து 367 ஆகும்.
இது குறித்து கேரள காங்கிரஸ் தலைவர் ரமேஷ் சென்னிதலா, இந்த மாபெரும் வெற்றி எங்களுக்கு பொறுப்புணர்வை அதிகரித்திருக்கிறது. இந்த வெற்றி எங்கள் தலைக்கு ஏறாது, மக்களுக்காக தொடர்ந்து உழைப்போம் எனத் தெரிவித்துள்ளார்.