நாடு முழுவதும் நடைபெற்று முடிந்துள்ள 17வது மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வியை சந்தித்துள்ளது. காங்கிரஸ் தலைவராக ராகுல் காந்தி பொறுப்பேற்று நடைபெற்ற முதல் தேர்தல் இது என்பதால் அக்கட்சியின் தலைவர் பொறுப்பிற்கு ராகுல் காந்தி சரியானவர்தானா என்ற கேள்விகள் கட்சிக்கு உள்ளேயும், வெளியேயும் எழத் தொடங்கின.
‘தலைவர் பதவியிலிருந்து விலகுகிறேன்’ - ராகுல் கடிதம்! - காங்கிரஸ்
டெல்லி: காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக ராகுல் காந்தி கொடுத்த கடிதத்தை ஏற்க காங்கிரஸ் செயற்குழு மறுத்துள்ளது.
இதற்கிடையே, அக்கட்சியின் செயற்குழு கூட்டம் டெல்லியில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. இதில், தலைவர் பதவியில் இருந்து தாம் விலகுவதாக ராகுல் காந்தி கடிதம் வழங்கியுள்ளார்.
ஆனால், காங்கிரஸ் கட்சியின் தோல்விக்கு கட்சியின் தலைவர் மட்டுமே காரணம் இல்லை என்றும், தோல்வி குறித்து அலசி ஆராய்ந்து அதனை சீர் செய்யும் முயற்சிகளில் ஈடுபட வேண்டும் எனவும் கூறி ராகுலின் கடிதத்தை ஏற்க செயற்குழு மறுத்துள்ளது. இந்த விவகாரம் அக்கட்சியின் தொண்டர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.