தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

குடிபெயர் தொழிலாளர்களின் கதையை யூ-ட்யூபில் வெளியிட்ட ராகுல் - கரோனா வைரஸ்

டெல்லி: கரோனா ஊரடங்கால் சொந்த ஊர் திரும்பும் குடிபெயர் தொழிலாளர்களிடம் உரையாடிய காணொலியை தனது யூ-ட்யூப் சேனலில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி வெளியிட்டுள்ளார்.

rahul-gandhi-to-share-migrant-labourers-incredible-story-of-grit-determination-and-survival-on-his-youtube-channel
rahul-gandhi-to-share-migrant-labourers-incredible-story-of-grit-determination-and-survival-on-his-youtube-channel

By

Published : May 23, 2020, 11:49 AM IST

உலகளவில் அச்சுறுத்தலை ஏற்படுத்திவரும் கரோனா வைரசை (தீநுண்மி) இந்தியாவில் கட்டுப்படுத்தும் நோக்கில் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.

தீநுண்மியின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரிக்கத் தொடங்கியதையடுத்து ஊரடங்கும் நீட்டிக்கப்பட்டுக்கொண்டே வந்தது.

இதனால், வேலையின்றி ஒருவேளை உணவிற்கே மிகவும் சிரமமடைந்த குடிபெயர் தொழிலாளர்கள் தாங்கள் பணிபுரிந்துவந்த மாநில அரசுகளிடமிருந்தோ, மத்திய அரசுகளிடமிருந்தோ உதவிகள் கிடைக்காததால் தங்களது சொந்த ஊருக்குச் செல்லத் திட்டமிட்டனர்.

அவர்களுக்கு அரசுகள் முறையான போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்தாததால் பல நூறு கிலோ மீட்டர் தொலைவிலுள்ள தங்களது சொந்த ஊர்களுக்கு நடந்தே செல்ல முற்பட்டனர். இதில் பலர் விபத்துகளில் சிக்கி உயிரிழந்த சம்பவங்களும் அரங்கேறியுள்ளன.

இந்நிலையில், டெல்லியிலிருந்து ஹரியானாவிலுள்ள தங்களது சொந்த ஊருக்கு நடந்து சென்றுகொண்டிருந்த குடிபெயர் தொழிலாளர்களை காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி சந்தித்து, அவர்களுடன் சில நிமிடங்கள் கலந்துரையாடினார்.

பின்னர், அவர்கள் தங்களது சொந்த ஊர்களுக்குச் செல்வதற்காக வாகன வசதிகளையும் ஏற்பாடு செய்துகொடுத்தார். இந்த நிகழ்வு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில், ராகுல் காந்தி குடிபெயர் தொழிலாளர்களுடன் கலந்துரையாடிய காணொலியை அவரது யூ-ட்யூபில் பகிர்ந்துள்ளார்.

பின்னணியில் சோகப் பாடலுடன் வெளியான இந்தக் காணொலியை அவரது ட்விட்டரில் இணைத்து, அதில், "வாழ்க்கைப் போராட்டம், அதில் எதிர்கொள்ளும் பல்வேறு கடினமான சூழல், போர்க்குணம் கொண்ட மன உறுதி ஆகியவற்றோடு இயைந்து வாழும் குடிபெயர் தொழிலாளர்களின் நம்பமுடியாத கதையை எனது யூ-ட்யூப் சேனலில் காணுங்கள்" எனப் பதிவிட்டுள்ளார்.

இதையும் படிங்க: கைவிட்ட அரசு; நடை பயணமாய் புறப்பட்ட குடிபெயர் தொழிலாளர்கள் - நேரில் சந்தித்த ராகுல்

ABOUT THE AUTHOR

...view details