தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

அமேதி மக்களுக்காக உருகிய ராகுல் காந்தி! - காங்கிரஸ் தலைவர்

டெல்லி: காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, அமேதி மக்களுக்கு உருக்கமானக் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

rahul gandhi

By

Published : May 4, 2019, 10:17 AM IST

நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு ஏழு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இதற்காக அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர்.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கேரள மாநிலம் வயநாடு தொகுதியிலும், உத்தரப் பிரதேச மாநிலம் அமேதி தொகுதியிலும் போட்டியிடுகிறார். ஏற்கனவே வயநாட்டில் வாக்குப் பதிவு முடிவடைந்த நிலையில், அமேதியில் வரும் திங்கட்கிழமை வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது.

அமேதி தொகுதியில் நான்காவது முறையாகக் களமிறங்கும் ராகுல், அங்குள்ள மக்களுக்காக உருக்கமாக 'அமேதி என் குடும்பம்' என்ற தலைப்பில் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

அதில், "வரும் தேர்தலில் தன்னை பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றிப் பெறச் செய்ய வேண்டும். அமேதி மக்கள் கொடுத்த அந்த அரவணைப்பிலேயே நாட்டில் அனைத்து திசைகளையும் ஒன்று படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளேன்.

காங்கிரஸ் மத்தியில் ஆட்சிக்கு வந்தால், பாஜக தடுத்த திட்டங்கள் அனைத்தும் தொடங்கப்படும்" என அந்த கடிதத்தில் உருக்கமாக ராகுல் காந்தி கூறியுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details