தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

வழக்கம்போல் தேர்தல் முடிந்தவுடன் வெளிநாடு பறந்த ராகுல்காந்தி! - ராகுல் காந்தி வெளிநாடு சென்றார்

டெல்லி: மகாராஷ்டிரா, ஹரியானா மாநில சட்டப்பேரவைத் தேர்தல்கள் முடிவடைந்ததையொட்டி, வழக்கம்போல் ராகுல்காந்தி வெளிநாட்டுக்குப் பறந்துள்ளார்.

Rahul Gandhi leaves for abroad ahead of Congress' protests on economic slowdown

By

Published : Oct 30, 2019, 9:35 PM IST

ஒவ்வொரு மாநில தேர்தல் முடிவுகள் வெளியானவுடன் ராகுல் காந்தி எப்போதும் வெளிநாடு பறப்பதை வழக்கமாக வைத்துள்ளார். அதேபோல் மகாராஷ்டிரா, ஹரியானா மாநில தேர்தல் முடிவுகள் கடந்த 24ஆம் தேதி வெளியான நிலையில், வழக்கம்போல் திங்கள்கிழமை வெளிநாட்டுக்கு ராகுல்காந்தி பறந்தார்.

இதனிடையே நாட்டில் நிலவிவரும் பொருளாதார மந்தநிலையைக் கண்டித்து காங்கிரஸ் கட்சி நவ. 5ஆம் தேதி முதல் நவ.15ஆம் தேதிவரை போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளது. காங்கிரஸ் கட்சியின் முதலமைச்சர்கள், மாநிலத் தலைவர்கள், நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஆகியோருடன் ஆலோசனைக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும் நவம்பர் மாதம் முதல் வாரத்தில் ராகுல் காந்தி நாடு திரும்பியவுடன் காங்கிரஸ் கட்சியின் போராட்டத்தில் கலந்துகொள்வார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: காந்தியடிகளை புதல்வனாக்கிய பாஜக எம்பி; சர்ச்சைப் பேச்சின் பின்னணி?

ABOUT THE AUTHOR

...view details